சென்னை: ‘தவெக அரசு ஒன்றிய அரசுக்கு நண்பனாக இருக்கிறார்கள்; அதே சமயம் நீட்டை எதிர்ப்பது போல பேசுகிறார்கள். ஜனநாயகம் என்ற வெற்று வார்த்தை எதற்கும் உதவாது; ஜனநாயகனாக வாழ வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் பூனைக்கு நண்பன், பாலுக்கு காவலன் என்பது போல தவெக அரசு உள்ளது’ – புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். மேலும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
