சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினமும் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.
