×

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை நீட் முறைகேடு குறித்து விவாதிக்க தயாராக இல்லை – காங்., பிடிவாதம்

டெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை நீட் ( தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி அளித்த பின்னரும் அதை ஏற்க மறுத்து காங்கிரஸ் எம்பி-க்கள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் ஜந்தர் மந்தர் மற்றும் பிரதமரின் இல்லம் அருகே நீட் தேர்வுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி மற்றும் அடக்குமுறைக்கு கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை நீட் முறைகேடு விவகாரத்தில் நியாயமான விவாதமோ அல்லது ஆலோசனையோ எதுவாக இருந்தாலும் அதை நாடாளுமன்றத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம். அவர் ராஜினாமா செய்யும் வரை எந்த விவாதத்திற்கும் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

Tags : Dharmendra Pradhan ,Kang ,DELHI ,MALLIKARJUNA GARKE ,NEET ,UNION ,MINISTER ,DHARMANDRA PRADHAN ,
× RELATED நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்