×

முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு

சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை தவெக அரசு மாற்றி உள்ளது. இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்திற்கு முதல்வரின் காலை உணவு திட்டம் என பெயர் வைக்கப்பட்டது. விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நான் முதல்வன், விடியல் பயணத் திட்டத்தை தொடர்ந்து காலை உணவு திட்ட பெயரும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Fri. K. Government ,Chennai ,Government of Daveka ,Dimuka Dhawar Mu ,Stalin ,
× RELATED நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்