×

காத்திருக்கும் 2.50 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ் மாநில பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகம் கோரிக்கை

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் பாரதி கூறியதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 50,000க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்று, 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஏன்? ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 2.50 லட்சம் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் உடனடியாக பணி வாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Mañjaya Bharti ,Takhtari ,Munnetra Kazhagam ,Chennai ,Press Club ,Chepauk, Chennai ,Bharti ,Tamil Mañjaya Bharti Takhtari Munnetra Kazhagam ,Tamil Nadu ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...