டெல்லி போலீசாரின் தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும்: இடதுசாரி எம்பிக்கள் கோரிக்கை

புதுடெல்லி: கல்வித்துறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நேற்று ஜந்தர்மந்தருக்கு சென்றனர்.

இக்குழுவில் மார்க்சிஸ்ட் மாநிலங்களவை எம்பிக்கள் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம், சிவதாசன் மற்றும் மக்களவை எம்பிக்கள் அம்ரா ராம், சு.வெங்கடேசன், சிபிஐ மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பின்னர் எம்பிக்கள் ஜான் பிரிட்டாஸ், சந்தோஷ்குமார் ஆகியோர் அளித்த பேட்டியில், ‘‘என்ன நடந்தது என்பதை அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: