சுற்றுலா பயணிகளை கவரும் பால்சம் மலர் அலங்காரம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்ட பால்சம் மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராமளான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். குறிப்பாக சீசன் சமயங்களில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவை தயார் செய்யப்படும்.

இந்நிலையில், 2ம் சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. தற்போது விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் பால்சம், பிகோனியோ, சைக்ளோமன், லிசியாந்திஸ் உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மலர்களே இல்லாத பூங்காவில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

Related Stories: