சென்னை: திமுக இளைஞர் அணி இன்று 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். திமுகவின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான திமுக இளைஞர் அணி இன்று தனது 47வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
அடுத்த இன்னிங்ஸ் கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மிசா பேட்ைஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் திமுக இளைஞரணி இன்றைக்கு 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் திமுக இளைஞர் அணியின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா..! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
