கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி வடக்கு தெரு காலனியை சேர்ந்த முனியாண்டி மனைவி ஆறுமுகம் (70). முனியாண்டி இறந்த நிலையில், ஆறுமுகம் கடந்த பல ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகத்திற்கு உணவு கொடுத்து விட்டு வீடு திரும்பினார்.
நேற்று ஆறுமுகம் வலது காதில் கிடந்த தோடு கழற்றப்பட்டும், இடது காது அறுக்கப்பட்ட நிலையில் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது அரை பவுன் தோடு காணாமல் போனது. இதுகுறித்து ஏர்வாடி போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
