சென்னை: அரசுப் பள்ளிகளில் செயல்படும் இலக்கிய மன்றம், கலை பண்பாட்டு மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்களின் செயல்பாடுகளை ஜூலை 28ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மன்ற செயல்பாடுகளுக்கு தனித்தனியாக ஒரு பொறுப்பாசியரை நியமிக்க வேண்டும். சிறந்து விளங்கும் ஒரு மாணவரை அந்த மன்றச் செயல்பாட்டுக்கான தூதுவராக நியமித்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
