கல்விக்கடன் உச்ச வரம்பை உயர்த்த முடிவு: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

சென்னை: உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும், பொறியியல், பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்வி கடன் விரைவு சேவை குறித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த காலங்களில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வந்தது. பல்வேறு நிலைகளிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் வரை தகுதி உள்ளவர்களுக்கு பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் உத்தரவாத கையெழுத்திட்டால் மட்டுமே கடன் வழங்கப்பட்டது. கடன் உச்ச வரம்பு ரூ.7.5 லட்சம் அதிகப்படுத்த வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்தார். அதன்படி, மாணவர்களுக்கான கல்வி கடன் அதிகரிக்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கான கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் என்ற உயர் எல்லை (சீலிங்) அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,02,000 மாணவர்களுக்கு ரூ.863 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் ரூ.3000 ஆயிரம் கோடியை கடக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நோடல் வங்கியை தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியரை அறிவித்திருக்கிறோம். அந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு அறிவார்கள். அவர்கள் மூலமாக தகவல்கள் அறியப்பட்டு, எந்த மாணவனும் கல்விக் கடன் கேட்டு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலை வராமல் இருக்க இந்த திட்டம் தொடங்கப்பட்ட உள்ளது.

Related Stories: