மாநில நல்லாசிரியர் விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது.

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு 386 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு மாநில தேர்வுக்குழு பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையிலும் மாவட்ட தேர்வுக்குழு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலும் குழு அமைக்கப்படவுள்ளது.

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் இன்று முதல் (ஜூலை 17) ஆக.3ம் தேதிக்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

Related Stories: