அதிமுக சார்பில் நடைபெறும் சென்னை, திருவள்ளூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேதி மாற்றம்

சென்னை: அதிமுக சார்பில் நடைபெறும் சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்கள் வாரியாக, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 25.7.2026 மாலை 5.30 மணியளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சென்னை புறநகர், திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் மட்டும் முன்கூட்டியே, 24.7.2026 (வெள்ளி) மாலை 5.30 மணியளவில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: