திமுக அரசை போலவே இந்தி திணிப்பு நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கூடாது: தவெக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூரில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகத்தை, சமூக நீதித்துறை அமைச்சகமாக பெயர் மாற்றம் செய்துள்ளதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சேலம் ஓதியத்தூரில் அம்பேத்கர் சிலை 7 ஆண்டு காலமாக திறக்க முடியாமல் உள்ளது. அம்பேத்கர் சிலை திறக்க முதல்வர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் வள்ளியூரில் வெண்கல சிலையாக புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை 25ம் தேதி திறக்க உள்ள நிலையில் போலீசார் அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. நாகர்கோவில் சபரிவர்மன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும் என விசிக சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்தி திணிப்பு காரணமாக தான் நவோதயா பள்ளிகளை தமிழக அரசு ஏற்கனவே அனுமதிக்காமல் இருந்து வந்தது.

தற்போதைய தவெக அரசும் அதனை கடைப்பிடித்திட வேண்டும். பல்கலைக்கழகங்களில் முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருந்து வருகிறது. எனவே காலியாக இருந்து வரும் துணைவேந்தர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வேண்டும். ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் நிலையினை ஏற்படுத்திட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: