பல்வேறு நோய்களுக்கு தடை போடும் பலாப்பழம் முசிறியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

முசிறி, ஜூலை 15: திருச்சி மாவட்டம், முசிறி கை காட்டி பகுதியில் முசிறி தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், சிபிஎஸ்சி மாணவ, மாணவிகள் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியில் போதை பொருட்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகள் கையில் ஏந்தியும் சென்றனர். பேரணியை அரவிந்தன் ஐபிஎஸ், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, கூடுதல் இயக்குனர், எம் ஐ டி கல்லூரி துணை தலைவர் பிரவின் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்,

தொடர்ந்து பேரணியில் மாணவ, மாணவிகள் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் சென்றனர். பேரணியானது கைகாட்டியில் தொடங்கி முசிறி காவல் நிலையம் தனியார் பள்ளி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது, கல்லூரி பேராசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: