திருச்சி, ஜூலை 8: திருச்சியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜூலை 6ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது விளையாத்சா நகர் அருகே கஞ்சா விற்ற உறையூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த யுவராஜ்(18) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
