கரூர், ஜூலை. 15: சட்ட ஆலோசகர் ஒராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால், கரூரில் புதிதாக சட்ட வல்லுநர்கள் விண்ணப்பிக்கலாம் எஸ்பி அலுவலகத்தில் தெரிவித்தனர். கரூர் எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசருக்கான ஒராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால், புதிதாக சட்ட வல்லுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விபரப்பட்டியலுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரும் 27ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என எஸ்பி அலுவலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
