கரூர் சுக்காலியூர் அருகே தலையணை உறை தயாரிக்கும் குடோனில் திடீர் தீ

கரூர், ஜூலை 13: கரூர் சுக்காலியூர் அருகே தலையணை உறை தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினை கரூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மதுரை பைபாஸ் சாலை சுக்காலியூர் அருகே சக்திவேல் என்பவருக்கு சொந்தமான தலையணை உறைக்கு பெயிண்டிங் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் குடோனை சுற்றிலும் காட்டுப்பகுதியாக உ்ள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 4 மணியளவில் அதிகளவு காற்றின் காரணமாக காட்டுப்பகுதியில் இருந்து பரவிய தீ குடோனின் உட்புறம் சென்று தலையணை உறைகள் மீது பற்றியது. இதன் காரணமாக தீ பற்றிய நிலையில், கரூர் தீயணைப்புத்துறையினர்களுக்கு இந்த பகுதியினர் தகவல் அளித்தனர். இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணிநேரம் போராடி தீயணை அணைத்தனர். இதுகுறித்து, சேத மதிப்பு மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: