வேலாயுதம்பாளையம் அருகே வடமாநில தொழிலாளி மர்மச்சாவு

வேலாயுதம்பாளையம், ஜூலை 14: ஜார்க்கண்ட் மாநிலம் ஹூ ஹேன்சா பகுதியைச் சேர்ந்த சோனிராம் (29). இவர், தூத்துக்குடி வீரபாண்டிபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் இவரது மாமனார் சாந்துராம் (46) என்பவர் புகளூர் செக்குமேட்டில் உள்ள டிஎன்பிஎல் ஒப்பந்த பணியாளர்கள் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சோனிராம் மாமனார் சாந்துராம் டிஎன்பிஎல் காகித ஆலைக்குள் கொட்டப்பட்டிருந்த பக்கா துகிள்கள் பறக்காமல் இருப்பதற்காக தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதை பார்த்த சகதொழிலாளர்கள், டிஎன்பிஎல் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவரை வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்துராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சோனிராம் வேலாயுதம்பாளைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், வழக்கு பதிவு செய்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories: