உலக புகழ் பெற்ற பூரி ரத யாத்திரை 16ம் தேதி துவக்கம்: டிரோன்கள் பறக்கத்தடை

பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை என்னும் தேரோட்ட திருவிழாவையொட்டி இம்மாதம் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பூரி ரத யாத்திரை எனப்படும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.ரத யாத்திரை வரும் 16ம் தேதி தொடங்குகிறது. ரத யாத்திரை விழாவின் போது நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பூரிக்கு வருவார்கள்.

இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், முழுமையான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, மாவட்ட நிர்வாகம் ஜூலை 16 முதல் 27 வரை 12 நாட்களுக்கு பூரி நகரைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் டிரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழலையும், அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமான அமைப்புகள் (டிரோன்கள்) ஏற்படக்கூடிய வான்வழி அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு, மாபெரும் நிகழ்வு ஒழுங்காக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது பாதுகாப்பு முகமைகளால் இயக்கப்படும் டிரோன்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

Related Stories: