×

திருமா பேசியது என்னை தூக்கி வாரி போட்டது: கிண்டலுக்கு வைகோ திடீர் விளக்கம்

சங்கன்கோவில்: தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தவெக அமைச்சரவையிலும் பங்கெடுக்கிறோம். திமுக கூட்டணியிலும் தொடர்கிறோம். தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணிக்கு வரவேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார் என்ற செய்தி என்னை தூக்கிவாரிப் போட்டது. வடதுருவமும், தென்துருவமும் சேரமுடியுமா?.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அமைச்சரவையில் எப்படி பங்குகொள்ள முடியும் என நினைத்ததால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்னு சொன்னேன். அவர் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அவருக்கு பக்கபலமாக நான் இருந்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன். எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. இந்த சொற்களைச் சொன்னதற்காக அவரது மனம் புண்பட்டிருந்தால் அந்த சொற்களை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thiruma ,Vaiko ,Sangankovil ,MDMK ,Tenkasi North and South ,General Secretary ,TDP ,DMK ,All ,India ,
× RELATED “பள்ளிகளில் அரசியல் கட்சியனருக்கு...