×

பெயரை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது: தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: பெயரை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது என்று தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது. மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே.

ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும். *பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thangam Thennarasu ,Thaveka government ,Chennai ,Former ,DMK ,minister ,
× RELATED திருமா பேசியது என்னை தூக்கி வாரி...