சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். உங்கள் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வின் ஒரு போற்றத்தக்க அங்கமாகிவிட்டது. இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம். தோனியின் அமைதியான தலைமைத்துவம், பணிவான குணம் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
