மதுரை: பைக் டாக்ஸி நடைமுறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம் என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவையை சட்டப்படி நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கக் கோரிய வழக்கில் பைக் டாக்ஸிக்கு சட்டப்படி அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு அளித்துள்ளது.
