×

முன்பதிவு தரிசன சீட்டுகளில்மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் முக்கிய கோயில்களில் இணையவழியில் நுழைவுசீட்டு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். முன்பதிவு தரிசன சீட்டுகள் வழங்கப்படுவதில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு தரிசன வழி ஏற்படுத்த வேண்டும். துறையின் இணையதளத்தை அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அலுவலர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

Tags : Chennai ,Hindu Religious Endowments Department ,Minister ,Ramesh ,
× RELATED மேகதாதுவில் சட்டவிரோத கட்டுமான பணி...