×

மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு மொபைல் வாங்க ரூ.10,000

சென்னை: மின்சார வாரியத்தில் மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு புதிய மொபைல் போன் வாங்குவதற்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. நெட்வொர்க் சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, தங்குதடையற்ற இணைய வசதி மற்றும் அழைப்பு வசதிகளுடன் கூடிய போஸ்ட் பெய்ட் சியுஜி சிம் கார்டுகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்த வசதியின் மூலம் நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்கள் எந்தவித தாமதமும் இன்றி, சம்பவ இடத்திலிருந்தே உடனுக்குடன் மின்வாரிய கணினியில் பதிவேற்றம் செய்ய வழிவகை ஏற்படும். இந்த ரூ.10,000 நிதியுதவியானது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது. ஒருமுறை இந்த தொகையைப் பெற்றுக் கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் இந்த வசதியைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Electricity Board ,
× RELATED ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2: 95.94 சதவீதம் பேர் எழுதினர்