×

உபி.யில் அண்ணன், தம்பி தற்கொலை சமாஜ்வாடி எம்எல்ஏ மீது போலீஸ் வழக்கு

பிரயாக்ராஜ்: உபி மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஹண்டியா பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகள் சுஷில் மற்றும் சந்தோஷ். இந்தநிலையில், கடந்த மாதம் 11ம் தேதி சந்தோஷ் கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார். அதே போல் இந்த மாதம் 3ம் தேதி சுஷிலும் மரத்தில் தூக்கு போட்டு இறந்தார். இந்த நிலையில் தனது சகோதரர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். தன்னுடைய சகோதரர்கள் இறப்பதற்கு முன் 5 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர் என்று சந்தோஷ், சுஷிலின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஹண்டியா சமாஜ்வாடி எம்எல்ஏ ஹக்கீம் லால் பிந்த் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : UP ,Samajwadi ,Prayagraj ,Sushil ,Santosh ,Handiya ,Prayagraj district ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால...