பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்தும் பீகார் மாநில பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகிய இருவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பை பீகார் அரசு மீண்டும் வழங்கியுள்ளது. இதன்மூலம், இரு தலைவர்களுக்கும் குண்டு துளைக்காத பிரத்யேக வாகனம் மற்றும் சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும்.
