கரனால்: ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திடீரென பற்றிய தீ வேகமாக பரவியதால் ராட்சத கரும்புகை வானில் பல கிலோமீட்டர் வரை காணப்பட்டது.
தகவல் அறிந்த விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதியில் போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான கரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலையில் இருந்து நச்சு மற்றும் கருப்பு புகை காரணமாக, சுற்றியுள்ள பகுதியில் பீதியின் சூழல் உள்ளது. விஷப் புகை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதி வெளியேற்றப்படுகிறது. ஊழியர்கள் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், ரசாயன பேரல்கள் மற்றும் பொருட்கள் தீ விபத்தில் சேதமடைந்தன.
