மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரியலூர் மாவட்ட மதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரியலூர் மாவட்ட மதிமுகவினர் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், மதிமுகவைச் சேர்ந்த அரியலூர் மாவட்டம், மாவட்ட பொருளாளர் வீர.புகழேந்தி தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் கோ.பழனிவேல், மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் அ.ஜாகிர்உசேன், நகர துணைச் செயலாளர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் எ.ரவி, ஜெயங்கொண்டனம் நகரம், வட்டச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், வேல்முருகன், ஜெயங்கொண்டம் நகர இளைஞர் அணி புருசோத்தமன், நகர மாணவர் அணி ராஜா திமுகவில் இணைந்தனர்.

அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் வெ.கொ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: