சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடி, சேலம்,நெல்லை, திருவண்ணாமலை, ஈரோடு, புதுக்கோட்டை,கும்பகோணம் உள்ளிட்ட பல மாநகராட்சி அலுவலங்கள்,ராமநாதபுரம், திருப்பத்தூர், தருமபுரி, திருவாரூர், தென்காசி,மயிலாடுதுறை, தர்மபுரி, திருத்தணி, உள்பட பல நகராட்சி அலுவலகங்களிலும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக டிஎஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் அந்தந்த மாநகராட்சி மண்டல் அலுவலகத்திற்கு சென்று இந்த திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை நடக்கக்கூடிய அனைத்து மண்டல அலுவலக வாயிற்கதவுகள் மூடப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகம்; பத்திரப்பதிவுஅலுவலகங்களை தொடர்ந்து மாநகராட்சிஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
