×

40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் – அடுத்த வாரம் நியூசிலாந்து செல்லும் பிரதமர் மோடி

டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்த தகவலை தெரிவித்து உள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்து நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். வரும் ஜூலை 10, வெள்ளிக்கிழமையன்று ஆக்லாந்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மறுநாளான ஜூலை 11-அன்று அங்கிருந்து புறப்படுவார்.

அதாவது பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணம் ஜூலை 10 மற்றும் ஜூலை 11 என மொத்தம் 2 நாட்கள் மட்டுமே. 2026 ஏப்ரலில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதே பிரதமர் மோடியின் மேற்கொள்ள உள்ள இந்த அரசுமுறை சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரிகளில் 95 சதவீதத்தை நீக்கும் வகையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் ஏப்ரல் மாதத்தில் கையெழுத்திட்டது நினைவுகூரத்தக்கது.

“40 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் நியூசிலாந்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்,” என்று நியூசிலாந்து பிரதமர் லக்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே நியூசிலாந்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிய நகரமான ஆக்லாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில், அங்கு வாழும் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களைப் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான (இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) தூதரகப் பயணத்தின் ஒரு பகுதியாகும்.

Tags : Modi ,New Zealand ,Delhi ,Narendra Modi ,Christopher Luxen ,India ,
× RELATED தந்தை அயதுல்லா காமேனி...