×

சட்டப்பேரவையில் விரைவில் மசோதா பொது சிவில் சட்டவரைவை ஆய்வு செய்ய புதிய குழு: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

சட்டப்பேரவையில் விரைவில் மசோதா பொது சிவில் சட்டவரைவை ஆய்வு செய்ய புதிய குழு: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்படும் முதல் முக்கிய கொள்கை சார்ந்த சட்டமுயற்சியாக, பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழுவை அமைக்க மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த வரைவுச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க அக்குழுவுக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில், மாநிலத்துக்கான தனித்துவமான பொதுசிவில் சட்ட கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதாக முதல்வர் சுவேந்து அதிகாரி சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் திசையில் நகரும் நான்காவது மாநிலமாக மேற்கு வங்கம் திகழும் .

Tags : West Bengal Cabinet ,BJP ,West Bengal ,
× RELATED கேரள அரசின் அனுமதி இல்லாமல் விழிஞ்ஞம்...