ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மகன்; தாய், தந்தையை மிரட்டி சொத்து பத்திரம், பணம் கேட்டதால் அதிர்ச்சி: போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

 

ஜெயங்கொண்டம், ஜூலை 3: உடையார்பாளையம் எல்லை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன் இவரது மனைவி செந்தாமரை (55). கணவர் உடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் சக்தி பாபு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. சக்திபாபு ஆன்லைன விளையாட்டில் பணத்தை இழந்து பல இடங்களில் கடன் வாங்கி வைத்துள்ளதாக தெரிகிறது. அடிக்கடி, தாயின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் கண்டித்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை வீட்டு முன்பு கையில் அரிவாளுடன் வந்த சக்திபாபு, அவரது தாய், தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சொத்துப்பத்திரம், பணம் கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சக்திபாபுவின் தந்தை செந்தாமரை உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: