பெரம்பலூரில் 4 வனசரகர்கள் பணியிட மாற்றம்

 

பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 வனச்சரகர்கள் மாவட்டத்திற்கு உள்ளாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி வன மண்டல வன பாதுகாவலர் காஞ்சனா என்பவர் பிறப்பித்த உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வனச் சரகத்தில் வனச்சரகராக பணிபுரிந்து வந்தவ பழனி குமரன், வேப்பந்தட்டை வனச்சராகவும், வேப்பந்தட்டை வனச்சரகத்தில் வனச்சரகராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர் பெரம்பலூர் வனச் சராகவும்,

பெரம்பலூர் சமூக காடுகள் சரக முருகானந்தம், சித்தளி வனவியல் விரிவாக்க மைய வனச்சரகராகவும், சித்தளி வனவியல் விரிவாக்கம் மைய வனச் சரகராகப் பணிபுரிந்து வந்த நாகஜோதி என்பவர், பெரம்பலூர் சமூக காடுகள் சரக வனச் சரகராகவும் பணி மாறுதல்செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட பணியிடங்களில் வனச் சரகர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Related Stories: