ஈரோடு, ஜூலை 3: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐக்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சென்னிமலை சாலை காசிபாளையம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பெரிய கொடிவேரியில் செயல்படும் இரண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பில்லை.
10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் 2 வருட பயிற்சி பிரிவுகளான எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங் டெக்னீசியன், டர்னர், மெஷினிஸ்ட், கோபா, டிராப்ட்மேன் சிவில் மற்றும் டெக்ஸ்டைல் வெட் பிராஸஸிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒயர்மேன் தொழிற்பிரிவிலும், மேலும் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு அதன் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான அட்வான்ஸ்டு சிஎன்சி மிஷினிங் டெக்னீஷியன்-2 வருடம், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள்-2 வருடம்,
மேனுபேக்ச்சரிங் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேசன்-1 வருடம், இன்டஸ்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீஷியன்-1 வருடம், பேசிக் டிசைனர் மற்றும் விர்ச்சுவல் வெரிபையர்-2 வருடம் போன்ற தொழிற்பிரிவிலும், பயிற்சியில் சேர அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகலாம். பயிற்சியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் இலவச தங்கும் விடுதி, அரசால் மாதம் ரூ.750 உதவி தொகை, தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண்; திட்டத்தில் தகுதியான மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, விலையில்லா பாட புத்தகங்கள்,
மிதிவண்டி, வரைபட கருவிகள், தையற் கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு பெரிய கொடிவேரியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை 94990 55705, 94990 55706 என்ற தொலைபேசி எண்ணிலும், ஈரோடு காசிபாளையம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை 04242275244 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
