வேலூர் உட்பட 8 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

 

வேலூர், ஜூலை 2: வேலூர் மாவட்டம் உட்பட 8 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்ட உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் என்.ஜி.நந்தகுமார், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எஸ்.சதீஷ்பாபு, தாம்பரம் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்.விஜயகுமார், மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலராகவும், சென்னை ஆளுநர் மாளிகை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கே.எம்.எஸ்.முகமது ரியாஸ், அதே அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தலைமை செயலக செய்தி வெளியீட்டு பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கேசவமூர்த்தி, அதே பிரிவில் மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்கள் உட்பட 8 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: