சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவு!!

சென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உதவியாளர்கள் 17 பேரின் நியமனம் நடைமுறைகளில் முறைகேடு என சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில் அவர்களின் நியமனத்தை ரத்து செய்து நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் மேலும் கூறியதாவது; திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற 2 ஆண்டு அவகாசம். விதிகளின்படி உரிய தகுதியை பெறுவதற்காக 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பணிகளில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால் நேரடி தேர்வு முறையை பின்பற்ற வேண்டும். விதிகளை பின்பற்றாமல் நியமனம் மேற்கொள்வது மக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்க்கும்’ என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: