காலையில் குறைவு.. நண்பகல் உயர்வு.. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்தது

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 20ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,600 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800 ஆகவும் இருந்தது. 22ம் தேதி பவுன் ரூ.1,08,800க்கும், 23ம் தேதி பவுன் ரூ.1,08,480க்கும், 24ம் தேதி ரூ.1,06,800க்கும், 25ம் தேதி ரூ.1,05,120க்கும், 26ம் தேதி ரூ.1,06,400க்கும் விற்பனையானது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 960-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560ம் சரிந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக குறைந்தது. அதன்படி ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனை விற்பனையானது. சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகல் ரூ.1,360 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.5 குறைந்த நிலையில் நண்பகலில் ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: