மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ – அரிய வகை தாவரங்கள், மூலிகைகள் கருகி சாம்பல்…

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால், பல ஏக்கர் பரப்பளவிலான மூலிகை மரங்கள் மற்றும் அரியவகை தாவரங்கள் தீயில் கருகி நாசமாகி உள்ளன. இந்த காட்டு தீ காரணமாக அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதுடன், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மலையில் கொழுந்துவிட்டு எரியும் இந்த தீயினால் தேக்கு, தெற்கத்தீ, சந்தனம் மற்றும் மலைவேம்பு உள்ளிட்ட விலைமதிப்பற்ற மூலிகை மரங்களும், அரிய வகை செடி, கொடிகளும் எரிந்து நாசமாகி வருகின்றன. தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைப்பகுதியில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக அவ்வப்போது இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளின் வாழ்விடங்களும், அரிய வகை தாவரங்கள் மற்றும் இயற்கை மூலிகைகளும் தீயில் எரிந்து நாசமாவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

 

Related Stories: