டீ குடித்து விட்டு பணம் கேட்ட பேக்கரி ஊழியர்கள் தாக்குதல்: வீடியோ வைரல்

 

திருப்பூர், ஜூன் 30: திருப்பூரில் டீக்கடையில் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு பணம் தராமல் டீ மாஸ்டரை தாக்கிய இளைஞர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர், மங்கலம் ரோட்டில் வசித்து வருபவர் செல்லையா (53). இவர், மாநகராட்சி அலுவலகம் எதிரே கடந்த 10 ஆண்டுகளாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி இளங்கோ என்பவர் டீ குடிக்க வந்தார். டீ மற்றும் உணவுப்பொருட்களை சாப்பிட்ட இளங்கோவிடம் ரூ.50 பில்லை கொடுத்துள்ளனர். அப்போது, இளங்கோ பில் தரமுடியாது எனக்கூறி தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றார்.

தொடர்ந்து இளங்கோ அருகில் இருந்த தனது நண்பர்களையும் அழைத்து வந்து பேக்கரியில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளார். இதுதொடர்பாக, செல்லையா அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். டீ மற்றும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு விட்டு காசு கேட்ட டீக்கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளியை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

Related Stories: