* வங்கதேச அணியுடன் ஹராரேவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 410 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் இன்னொசென்ட் 140, பென் கரன் 42, பென்னெட் 59, கிரெய்க் எர்வின் 60, வெஸ்லி 77* ரன் விளாசினர். முன்னதாக, வங்கதேசம் முதல் இன்னிங்சில் 140 ரன்னுக்கு சுருண்டிருந்தது. 270 ரன் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2வது இன்னிங்சை விளையாடுகிறது.
* இலங்கை அணியுடன் நார்த் சவுண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 217 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இலங்கை 308 மற்றும் 101. வெஸ்ட் இண்டீஸ் 626/9 டிக்ளேர் (அம்ர் ஜாங்கூ 233, கேப்டன் சேஸ் 194). ஆட்ட நாயகன்: அமிர் ஜாங்கூ. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது.
