×

மெஸ்ஸியின் மேஜிக் ஃபிரீ கிக்

உலக கோப்பை ஜே பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா ஜோர்டான் அணிகள் மோதின. டாலஸ் அரங்கில் நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில், அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி களமிறக்கப்படவில்லை. அவர் பெஞ்ச்சில் இருந்தாலும், துடிப்புடன் விளையாடிய அர்ஜென்டினா அணிக்கு கியோவனி லோ செல்சோ 19வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து லாதரோ மார்டினஸ் 31வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க, இடைவேளையின்போது அர்ஜென்டினா 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி தொடக்கத்திலேயே ஜோர்டான் வீரர் மூசா அல்தமாரி (55வது நிமிடம்) கோல் போட, ஆட்டம் விறுவிறுப்பானது. 60வது நிமிடத்தில் மெஸ்ஸி மாற்று வீரராக உள்ளே வர எதிர்பார்ப்பு எகிறியது. 80வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸி மாயாஜாலம் போல மின்னல் வேகத்தில் கோல் போட்டு அசத்த, ஜோர்டான் கோல்கீப்பர் உள்பட எதிரணி வீரர்கள் தங்கள் கண்களையே நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நடப்பு தொடரில் தனது 6வது கோலை பதிவு செய்த மெஸ்ஸி கோல்டன் பூட் ரேசில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். உலக கோப்பையில் இது அவர் அடித்த 19வது கோலாகும். மேலும், தொடர்ச்சியாக 7 உலக கோப்பை ஆட்டத்தில் கோல் போட்ட முதல் வீரர் என்ற சாதனையும் மெஸ்ஸி வசமானது. ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஜே பிரிவில் முதலிடம் பிடித்தது. ரவுண்ட் ஆப் 32 நாக் அவுட் சுற்றில் அந்த அணி கபோ வெர்டே சவாலை சந்திக்கிறது. இப்போட்டி ஜூலை 4ம் தேதி மயாமியில் நடைபெறும்.

Tags : Messi ,Argentina ,Jordan ,World Cup Group J ,Lionel Messi ,Dallas Stadium ,
× RELATED வரலாற்று சாதனை படைத்த துளசிமதி முருகேசன்