×

பிபா உலகக்கோப்பை கால்பந்து

 

* வாரி வழங்கிய வள்ளல் நெய்மர்!

பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் செய்த ஒரு மனிதாபிமான உதவி, உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு வைரலாகி உள்ளது. வெனிசுலாவில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் 1400க்கும் அதிகமானோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளும், அடுக்கு மாடி கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகின. இந்தப் இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிவாரண நிதியாக 2.35 கோடி ரூபாய் வழங்கி உதவியுள்ளார் நெய்மர்.

* நிறவெறிக்கு எதிராகப் பொங்கிய வினிசியஸ்

பிரேசில் நட்சத்திரம் வினிசியஸ் ஜூனியர் (25 வயது), கால்பந்து விளையாட்டிலும் பொது வாழ்க்கையிலும் தான் தொடர்ந்து நிறவெறியை எதிர்த்து போராட வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து உலக அளவில் பிரபலமான கால்பந்து வீரராக முத்திரை பதித்திருக்கும் வினிசியஸ் இது குறித்து கூறுகையில், ‘நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு எனது பாட்டி தான் காரணம். 16 வயது வரை அவரிடம் தான் வளர்ந்தேன்.

அவர் கற்றுக்கொடுத்த நல்ல பழக்க வழக்கங்களே என்னை சிறந்த மனிதனாக்கி உள்ளன. கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல, பொதுவாழ்க்கையிலும் நிறவெறியால் பல முறை பாதிக்கப்பட்டிருக்கிறேன். அது போன்ற நெருக்கடியான சமயங்களில் பாட்டியின் ஆறுதல் வார்த்தைகளே உடைந்து போகாமல் காப்பாற்றின. அடுத்த தலைமுறையாவது இதில் இருந்து தப்பி சமத்துவமான உலகைக் காண வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக என்னால் இயன்ற உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறேன்,’ என்றார்.

Tags : FIFA World Cup Football ,Neymar ,Brazil ,Venezuela ,
× RELATED சங்க நடவடிக்கையில் பங்கேற்க வாழ்நாள்...