திருவள்ளூர் – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், திருவள்ளூர் வழியாக சென்ட்ரல் வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டுவருகின்றனர். புறநகர், விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதியடைத்துள்ளன.

அரக்கோணம் ரயில்வே பகுதியில் அவசர தண்டவாள பராமரிப்புப் பணிகள் தொடர்வதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று வழக்கமான நேரத்தை விடத் தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி மார்க்கத்தில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை வரும் முக்கிய விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, 1.5 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. புறநகர் மின்சார ரயில்கள் அரைமணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.

கடந்த ஜூன் 27, 28 ஆம் தேதிகளில் அரக்கோணம் யார்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று ரயில்கள் ரத்து செய்யப்படாவிட்டாலும் தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) ரயில்கள் தாமதமாவதால், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் வழக்கமாகப் பயணிக்கும் அலுவலகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நேற்றோடு (ஞாயிறு) பெரும்பாலான முக்கிய ரத்துகள் முடிவடைந்தாலும், தண்டவாள இணைப்பு மற்றும் சிக்னல் சோதனைகள் (Signal testing) இன்றும் தொடர்வதால் அதன் தாக்கம் இன்றைய ரயில் சேவையில் எதிரொலிக்கிறது.

 

 

Related Stories: