×

கராச்சி ராணுவ தளம் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு பாக். குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு, கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் சிந்து ரேஞ்சர்ஸ் பாதுகாப்பு படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இதன் மீது நேற்று முன்தினம் இரவு தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தினர். மேலும், கையெறி குண்டுகளை வீசியும், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் பாகிஸ்தானின் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பும், கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், நிராகரிக்கிறோம். மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு பதிலாக, பாகிஸ்தான் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ” என்றார்.

Tags : Pakistan ,India ,Karachi ,New Delhi ,Sindh Rangers ,Karachi, Pakistan ,
× RELATED பஞ்சாப் அரசின் புதிய சட்டம் அனைத்து...