பீகாரில் புதிய சர்க்கரை ஆலைகளைத் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு வெறும் 1 ரூபாய்க்கு 40 ஏக்கர் வரையிலான அரசு நிலம், 30 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. நலிவடைந்து வரும் கரும்புத் தொழிலை மீட்டெடுக்கவும், பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் இத்திட்டம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
