×

எ.வ.வேலு வீட்டில் சோதனை ஆளும்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக. இதைவிட பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : DMK ,E.V. ,Velu ,MK Stalin ,Thaweka government ,Chennai ,Anti-Corruption Bureau ,minister ,E.V. Velu ,
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர்...