×

எளிமை – நேர்மை – கொள்கை பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்: முதல்வர் புகழாரம்

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி ‘‘எளிமை – நேர்மை – கொள்கை பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்’’ என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம். சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : VP Singh ,Chief Minister ,Chennai ,Vijay ,
× RELATED ரூ.127 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 300...