×

கடன் வாங்குவது தவறில்லை என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் விமர்சனம் சட்டசபையில் செய்யாமல், வேறு எங்கு செய்ய முடியும். எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளும் கட்சியும் பேசட்டும், அதனால் தவறு ஒன்றும் இல்லை.

கடன் வாங்குகிறோம் என்றால், அதன் மூலமாக பொதுமக்களுக்கான சொத்தை கட்டி உருவாக்கி கொடுக்க வேண்டும். பள்ளியாக இருக்கட்டும், மருத்துவமனையாக இருக்கட்டும், தொழிற்சாலை நிறுவனமாக இருக்கட்டும். இவையெல்லாம் பரம்பரை பரம்பரையாக அடுத்த 50, 60 ஆண்டுகள் இருக்கும். பொருளாதாரம் வளரும், அதனால் கடன் வாங்கிக் கொண்டே செல்கிறோமே என்பதை விட, அதன் மூலமாக என்ன செய்கிறோம் என்பதுதான் விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,Chennai ,Kanchipuram ,
× RELATED ரூ.127 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 300...